அதிபராக டிரம்ப் பதவியேற்ற சில மணித்தியாலங்களில் பதவி விலகிய விவேக் ராமசாமி!
அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில மணித்தியாலங்களிலேயே அவர் உருவாக்கிய DODGE துறையின் இணை தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி (39 வயது) பதவி விலகியுள்ளார்.
அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE. புதிதாக உருவான இந்த துறையின் தலைவர்களாக உலக பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி நியமிக்கப்பட்டனர்.
இருவரும் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டனர்.
இவர்களின் ஆதரவை அங்கீகரிக்கும் விதமாகவே டிரம்ப் DODGE துறையை உருவாக்கி இவர்களை தலைவர்களாக்கினார். ஆனால் தற்போது விவேக் ராமசாமி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராமசாமி,
It was my honor to help support the creation of DOGE. I’m confident that Elon & team will succeed in streamlining government. I’ll have more to say very soon about my future plans in Ohio. Most importantly, we’re all-in to help President Trump make America great again! 🇺🇸 https://t.co/f1YFZm8X13
— Vivek Ramaswamy (@VivekGRamaswamy) January 20, 2025
DOGE ஐ உருவாக்க உதவும் வாய்ப்பு, எனக்கு கிடைத்த மரியாதை. அரசாங்கத்தை சீரமைப்பதில் எலான் மஸ்க் & குழு வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்.
ஓஹியோவில் எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி நான் மிக விரைவில் கூறுவேன். மிக முக்கியமாக, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற அதிபர் டிரம்பிற்கு உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்! என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.