இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; 11 பேர் பலி 12 பேர் மாயம்!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவலறியப்பட்டுள்ளது.
மேற்கு சுமாத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலையில் நேற்றைய தினம் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது.
படாங் தேடல் மற்றும் மீட்பு படையின் தலைவர் அப்துல் மாலிக் கூறுகையில், “26 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்துள்ளனர். அவர்களில் 14 பேரை கண்டுபிடித்துள்ளோம். அதில் 3 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
படிந்துள்ள சாம்பல் திட்டுகள்
திடீரென ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பெரும் அளவிலான சாம்பல்கள் படிந்துள்ளன.
படிந்துள்ள சாம்பல் திட்டுக்கள் சாலை மற்றும் கார்களை குப்பைகள் மூடியுள்ளன.
இந்தோனேசியாவில் கடந்த மாதம் 22-ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது எரிமலை வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.