உயிரைப் பறித்த செல்பி மோகம்; சுற்றுலா சென்ற இடத்தில் மனைவியை பறிகொடுத்த கணவன்
எரிமலை பின்னணியில் புகைப்படம் எடுத்துகொண்டிருந்த பெண் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிரபலமான எரிமலை சுற்றுலா பூங்கா உள்ளது. இங்கு சீனாவை சேர்ந்த ஹூவாங் என்ற பெண், தனது கணவருடன் சுற்றுலா வந்திருந்தார்.
தன்னை மறந்து புகைப்படம்
பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்ட அவர், பல இடங்களில் நின்று புகைப்படம் பிடித்தார். 'புளூ பயர்' என்று அழைக்கப்படும் ஒரு எரிமலை சீற்ற நிகழ்வை படம் பிடிப்பதற்காக அவர் ஒரு குன்றின் உயரமான இடத்திற்கு சென்றார்.
அங்கிருந்து எரிமலை பின்னணியில் தன்னை மறந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். 75 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
வெளிநாட்டிற்கு சுற்றுலா வந்த இடத்தில் மனைவியை இழந்த சோகத்தில் செய்வதறியாது துயரத்தில் மூழ்கினார் அவரது கணவர்.
செல்பி மோகத்தால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பலரும் விமர்சன கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.