குழந்தையில்லாத பெற்றோருக்கு வாக்குரிமையா? பயனர் கருத்துக்கு எலான் மஸ்க் வழங்கிய பதில்
உலக கோடீசுவரர்களில் முதல் இடத்தில் இருப்பவரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், குறைந்த மக்கள் தொகை நெருக்கடியை சமாளிக்க மக்கள் பல குழந்தைகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர்.
இந்நிலையில், குழந்தை இல்லாதவர்கள் மற்றும் அவர்களின் வாக்குரிமை குறித்தும் ஒரு டுவிட்டர் பயனர், "குழந்தையில்லாத பெற்றோருக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்தாமல் ஜனநாயகம் நீண்டகாலம் செயல்பட முடியாது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது கருத்தினை ஆமோதிக்கும் விதமாக, ஆம் என மஸ்க் பதிவிட்டிருக்கிறார்.
அதேவேளை இதற்கு முன்பே ஒரு முறை எலான் மஸ்க், "குழந்தை இல்லாதவர்களுக்கு எதிர்காலத்தில் சிறிய பங்கே உள்ளது. மனித நாகரிகம் எதிர்கொள்ளும் அபாயங்களிலேயே மிகப்பெரிய அபாயம் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது" என்றும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.