போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; பாப்பரசர் 14 ஆம் லியோ
இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என பாப்பரசர் 14 ஆம் லியோ கேட்டுக்கொண்டுள்ளார்.
அங்குள்ள நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் பணயக் கைதிகளை விடுவித்து, உதவிகளை வழங்க வேண்டும் எனவும் இரு தரப்புக்கும் வலுவான வேண்டுகோள் விடுப்பதாக பாப்பரசர் கூறியுள்ளார்.
அதிகமான அளவிற்குப் பயங்கரவாதம், அழிவு மற்றும் மரணத்தை ஏற்படுத்தியுள்ள போரானது விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனித பூமியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் மற்றும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் ஒரு வலுவான வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் மனிதாபிமான உதவிகளை மக்கள் பாதுகாப்பாக அணுகுவதை எளிதாக்க வேண்டும் என்றும், மனிதாபிமான சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும், என்றும் பாப்பரசர் வலியுறுத்தியுள்ளார்.