ட்ரம்ப் காலகெடுவால் ஈரானில் போர் பதற்றம்!
ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை காலக்கெடு விதித்துள்ளார்.
இந்த காலக்கெடுவிற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.

இந்த நிலையில் ஈரானில் இருக்கும் இந்திய மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள் மற்றும் யாத்ரீகர்கள் வணிக ரீதியான விமானங்கள் அல்லது கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அல்லது அவசர காலங்களில் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஈரானில் உள்ள இந்திய துாதரகம் அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது.