அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ...ஈரானிடமிருந்து வந்து எச்சரிக்கை
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.
போரை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இதனால் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா? என்ற கேள்வி இன்னும் முற்றுப்பெறாமல் உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், தற்போது ஆணு ஆயுதம் தயாரிக்க யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டியுள்ளோம்.
அதை முழு திறன் கொண்ட 90 சதவீதமாக செறிவூட்டுவோம் என்று ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"மற்றொரு தாக்குதல் நடைபெறும் பட்சத்தில், ஈரானின் விருப்பத் தேர்வுகளில் ஒன்றாக 90 சதவீத செறிவூட்டல் அமையக்கூடும்.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து ஆராயப்படும்" என்று ஈரானின் நாடாளுமன்ற கமிஷனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.