பிரான்ஸில் தொலைபேசி பயன்படுத்தும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பிரான்ஸில் தொலைபேசி பயன்படுத்தும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் வாழும் மக்கள் ‘விஷிங் என அழைக்கப்படும் புதிய தொலைபேசி மோசடி தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் அவதானிக்கவில்லை என்றால் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் பறிப்போகும் அபாயம் உள்ளதென கணினி தொழில்நுட்ப பிரிவு எச்சரித்துள்ளது.
பொதுவான குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடியை பிஷிங் என அழைக்கப்படும் நிலையில் விஷிங் என்பது குரல் வழியாக முன்னெடுக்கப்படும் மோசடி என தொழில்நுட்ப பிரிவு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மக்களின் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான செயலால் பாதிக்கப்பட்டவர்களை எச்சரிக்கும் வகையில் வங்கியில் இருந்து அழைபபு ஏற்படுத்துவதாக கூறுவதாக தெரியவந்துள்ளது. மோசடியாளர்களின் வலையில் விழ வைப்பதற்காக, பரிவர்த்தனைகளை சரிபார்ப்பதற்கு தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் மக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஆயிரம் முதல் பல்லாயிரம் யூரோ வரையில் பணத்தை இழந்துள்ளதாக அரசாங்க ஒன்லைன் பாதுகாப்பு சேவையின் இணைய பாதுகாப்பு நிபுணத்துவத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனால் அவ்வாறான அழைப்பு வந்தால் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.