கனடாவில் கொலைக் குற்றவாளிக்கு நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு
கனடாவில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு நாடு தழுவிய ரீதியில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மார்க்கம் வீட்டுமனை முகவர் ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த நாடு தழுவிய ரீதியிலான பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யுக் ரிங் அனிடா மியுய் என்ற 56 வயதான வீட்டுமனை முகவர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.
ஒன்றாரியோ பேரெய் சவுன்ட் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மியுயின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 47 வயதான ஸியோங் மார்கோ ஹு என்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த நபர் பற்றிய தகவல்கள் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.