சவுதி அரேபியாவில் நேற்று ஒரேநாளில் மட்டும் இத்தனை மரண தண்டனையா?
சவுதி அரேபியாவில் நேற்று ஒரேநாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. அந்த வகையில் அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனவும், அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
ஐஎஸ், அல்கொய்தா என பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 81 பேருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை தூக்கு மூலம் நிறைவேறப்பட்டதா? அல்லது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதா? என்பது குறித்து சவுதி அரசு எந்த வித தகவலும் வெளியிடவில்லை.