கனடாவில் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!
கனடாவில் பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
இந்து அமைப்புகளினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது இந்தியா, பிஜி, மலேசியா, இலங்கை சிங்கப்பூர், நேபாளம் போன்ற பல நாடுகளில் தீபாவளி தினம் பொது விடுமுறை ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்காவிலும் தீபாவளி பொது விடுமுறை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் எதிர்வரும் ஆண்டு தீபாவளி தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் சுமார் இரண்டு லட்சம் இந்துக்கள் வாழ்ந்த வருகின்றனர் இந்த நிலையில் கனடாவிலும் தீபாவளி தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளன.
இந்த நாட்டில் பணியாற்றி வருகின்றோம் எனவும் இந்த நாட்டில் வரி செலுத்துகிறோம் எனவும் தமது திறமைகளை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்து உள்ளோம் எனவும் இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தங்களுக்கு பிரதான பண்டிகையான தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கனடிய ஹிந்து அமைப்பின் பணிப்பாளர் சித்த சவுத்ரி இந்த விடயத்தை வலியுறுத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் கனடாவிற்கு குடியேறுபவர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியாவில் பிறந்தவராக காணப்படுவதால் காணப்படுகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.
தீபாவளி தினத்தில் நகர சபை தேர்தல்கள் நடத்தப்பட்டமை குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீபாவளி தினத்தை பொது விடுமுறையாக கனடாவில் அறிவிக்கப்பட வேண்டும் என இந்து ஆதரவு அமைப்புகள் கோரிக்கையை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது