இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது - சவூதி அரேபியா
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து குறைவதற்கும், எண்ணெய் விலை உயர்வுக்கும் தாங்கள் பொறுப்பல்ல என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஏமனின் ஹூதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் எண்ணெய் விநியோகம் தட்டுப்பாட்டு அதன் விலையை உயர்ந்துள்ளது. அதே சமயம் எண்ணெய் உற்பத்தியை குறைத்து கச்சா எண்ணெய் விலையை உயர்த்த வேண்டும் என்று பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிற்கு (OPEC) சவுதி அரேபியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஏற்கனவே பல நாடுகளில் எண்ணெய் விலை அதிகமாக உள்ளதால், சிறிய தாக்குதலை பயன்படுத்தி கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கத்தில் சவுதி அரேபியா செயல்படுகிறது என்ற சந்தேகம் உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏமன் மோதல்கள் நமது நாட்டின் எண்ணெய் கிணறுகளை குறிவைக்கும் போது கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து விலை உயர்ந்து வருகிறது.
இதற்கு எங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை."
இந்த மாத தொடக்கத்தில், ரஷ்யா-உக்ரைன் போரின் போது கச்சா எண்ணெய் பேரலுக்கு 140 டொலர் என்ற சாதனையை எட்டியது. இன்று ஒரு பீப்பாய் விலை 112 அமெரிக்க டொலர்கள் . இருப்பினும், இது ரஷ்ய-உக்ரைன் போருக்கு முந்தையதை விட $ 15 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.