அச்சுறுத்தலை நாம் வேடிக்கை பார்க்கமாட்டோம்; அமெரிக்கா எச்சரிக்கை!
உலகளாவிய கருத்து சுதந்திரம், மத சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஈரான் ஆட்சியாளர்களால் ஏற்படும் அச்சுறுத்தலை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது அமெரிக்க நிதித்துறை கூறியுள்ளள்ளது.
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (Salman Rushdie) , சாத்தானின் கவிதைகள் என்ற நூலை எழுதியதன் காரணமாக அச்சுறுத்தலுக்கிடையே வாழ்ந்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் , சல்மான் ருஷ்டி (Salman Rushdie) ஒரு கண் பார்வையை இழந்தார். ஒரு கையின் செயல்பாட்டை இழந்தார்.
இதற்கிடையே, சல்மான் ருஷ்டியை (Salman Rushdie) கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசாக வழங்கப்படும் என்று ஈரான் நாட்டைச் சேர்ந்த கோர்டாட் பவுண்டேசன் என்ற அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில் அந்த அமைப்புக்கு அமெரிக்கா நேற்று பொருளாதார தடை விதித்தது. அமெரிக்க நிதித்துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே உலகளாவிய கருத்து சுதந்திரம், மத சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஈரான் ஆட்சியாளர்களால் ஏற்படும் அச்சுறுத்தலை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்றும் அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது.