இனவெறியை நாம் எதிர்த்து நிற்க வேண்டும்; பிரதமர் ரிஷி சுனக்!
பக்கிங்காம் அரண்மனையை சுற்றி வளைத்துள்ள இனவெறி சர்ச்சைகளை தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) “இனவெறியை நாம் பார்க்கும் போதெல்லாம் அதை நாம் எதிர்த்து நிற்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று பிரித்தானியாவின் ராணி கன்சார்ட் கமிலா(Consort Camilla) நடத்திய “பெண்களுக்கு எதிரான உலகளாவிய வன்முறை தொற்றுநோய்” குறித்த கூட்டத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின்(Elizabeth II) உதவியாளர் லேடி சூசன் ஹஸ்ஸி-(Susan Hussey )யால் இனவெறி தாக்குதலுக்கு ஆளான தொண்டு நிறுவனத்தின் என்கோசி ஃபுலானி(Ngozi Fulani), ட்விட்டரில் இருவருக்கும் இடையிலான பரிமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
அதில் நீங்கள் எங்கு இருந்து வருகிறீர்கள், ஆப்பிரிக்காவின் எந்த பகுதியை சேர்ந்தவர், மற்றும் உண்மையில் நீங்கள் எங்கு இருந்து வருகிறீர்கள் என்று மீண்டும் மீண்டும் சூசன் ஹஸ்ஸி (Susan Hussey )கேட்டதால் முற்றிலும் திகைத்து போனேன் என்று ஃபுலானி (Ngozi Fulani)தெரிவித்து இருந்தார்.
83 வயதான லேடி சூசன் ஹஸ்ஸி(Susan Hussey ), லண்டனைச் சேர்ந்த சிஸ்டா ஸ்பேஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் என்கோசி ஃபுலானியிடம் இனவெறியுடன் பல கேள்விகளை கேட்டு சர்ச்சை வெளியானதை தொடர்ந்து தனது மன்னிப்பு கோரினார்.
மேலும் புதன்கிழமையன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் அவர் வகித்த கெளரவ பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்தார். பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் ராயல் அரச குடும்பத்தை சுற்றி வளைத்துள்ள இனவெறி சர்ச்சைகள் குறித்து பேசிய பிரித்தானியாவின் பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) , “இனவெறியை நாம் பார்க்கும் போதெல்லாம் அதை நாம் எதிர்த்து நிற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அரச முடியாட்சி சம்பந்தப்பட்ட இந்த சர்ச்சைகளுக்கு நேரடியாக கருத்து தெரிவிக்க மறுத்த பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) , தானும் இனவெறியை அனுபவித்துள்ளேன், ஆனால் நான் சிறுவயதில் அனுபவித்தது இப்போது நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. "இனவெறியை கையாள்வதில் நம்முடைய நாடு நம்பமுடியாத முன்னேற்றம் அடைந்துள்ளது," இருப்பினும் நாம் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன என தெரிவித்தார்.
அத்துடன் நாம் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிறந்த எதிர் காலத்திற்கு செல்வது சரியானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.