எங்களுக்கு பயம் இல்லை; உக்ரைன் அதிபர் ஆவேச உரை
எங்கள் நகரங்கள் முற்றுகையிடப்பட்டாலும் நிலம், சுதந்திரத்திற்காக போராடுகிறோம் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.
ரஷியா போரை தொடரும் எனவும், அதிலிருந்து பின்வாங்க போவதில்லை எனவும் ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொளி காட்சி மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) உரையாற்றினார்.
அப்போது அவர் கார்கிவ் மத்திய சதுக்கத்தில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல் வெளிப்படையான பயங்கரவாதம். ரஷியா ஒரு பயங்கரவாத நாடாக மாறி உள்ளது.
ரஷிய ஷெல் தாக்குதல் ஒரு 'போர் குற்றம்' இச்சூழலியும் நாங்கள் பலமாக இருக்கிறோம்.எங்களை யாரும் உடைக்க முடியாது.
இதன்போது நீங்கள் உக்ரைனுடன் இருப்பதை நிரூபிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) அழுத்தமாக தெரிவித்தார்.