அதிகாரத்தைக் கைப்பற்ற பெரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – மஹிந்த
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் பெரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு மகிந்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மே தின நிகழ்வுகள் நடத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌர்ணமி தினத்தில் மே தினம் அமைந்துள்ள காரணத்தினால் வழமையான மே தின நிகழ்வுகள் எதனையும் தமது கட்சி நடத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
மே தினவென்று சில் அனுட்டானம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்படுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு நிச்சயமாக ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அது புது வருடத்திலா என உறுதிப்பட கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மாற்றமொன்றை மேற்கொள்வதற்கு ஆயத்தமாக உள்ளோம் என மகிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளார்.