ஆபத்தான பிரதேசம்... கடும் குளிரால் உறையும் மேற்கு கனடா: வெளியான எச்சரிக்கை
மேற்கு கனடாவின் பல மாநிலங்களில் வெப்பநிலை கடும் சரிவைக் கண்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆய்வு மையம் திங்களன்று வெளியிட்ட தகவலில், ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியாவின் குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் Saskatchewan ஆகிய மாகாணங்களில் கடும் குளிருக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர்.
எட்மண்டனில், திங்கட்கிழமை காலை வெப்பநிலை -41.6 C ஆகக் குறைந்தது, ஆனால் காற்றின் குளிர்ச்சியுடன் -55 C என உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்கரியிலும் இதே நிலை காணப்பட்டதாகவும், வெப்பநிலை -31.6 C என குறைந்து, காற்றின் குளிர்ச்சியுடன் -43 C என உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆல்பர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதும் உள்ள 43 சமூகங்களில் ஞாயிறு மற்றும் திங்கள் இடையே மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதில் ஆல்பர்ட்டாவின் Grande Prairie பகுதியில் 1984கு பிறகு புதிய சாதனையாக வெப்பநிலை -44.4 C என சரிவடைந்துள்ளதும் பதிவாகியுள்ளது.
இதனாலையே, மேற்கு கனடா தற்போதைய சூழலில் மிக ஆபத்தான பிரதேசமாக பார்க்கப்படுவதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.