கனடாவில் விமானத்தில் அடிக்கடி கழிப்பறையை பாவித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை
கனடாவில் விமாமொன்றில் அடிக்கடி கழிப்பறையை பயன்படுத்திய பெண் ஒருவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.
வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானம் பறப்பதற்கு முன்னதாக இந்தப் பெண் அதிக தடவைகள் கழிப்பறையை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோனா ச்யூ இவ்வாறு விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
மெக்ஸிக்கோவிற்கு புறப்பட்டுச் செல்லவிருந்த விமானத்திலிருந்த குறித்த பெண் எழுத்தாளர் இறக்கிவிடப்பட்டுள்ளார்.
விமானம் பறப்பதற்கு முன்னதாக பல சந்தர்ப்பங்களில் கழிப்பறையை பயன்படுத்தியதாகவும், வயிற்றுப் போக்கு காரணமாக இவ்வாறு பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் சமூக ஊடகங்களில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட போதிலும் பதிலீட்டு விமானச் சீட்டோ அல்லது ஹோட்டலில் தங்குவதற்கான வசதியோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்டதன் பின்னர் விமான சேவை நிறுவனம் பதிலளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.