கனடாவில் வாக்கெடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து
கனடாவில் இன்றைய தினம்பொதுத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், வின்சரில் உள்ள WFCU மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடிக் கொண்டிருக்கும் போது, அவ்விடத்தில் நடைபெற்று வந்த பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு மையம் மாற்றப்பட்டது.
காலை 8787 மக்ஹக் தெருவில் அமைந்துள்ள WFCU மையத்தில் தீ பரவல் ஏற்பட்டது. மையத்தின் கூரையில் தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் டார்ஃபீல்டில் இருந்து புளோரன்ஸ் வரை மக்ஹக் தெருவை மூடினர், பொதுமக்களை அந்த பகுதியில் இருந்து விலகியிருக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
தீயணைப்பு அதிகாரிகள், மையத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தினர்.
அப்போது, WFCU மையம் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு மையமாகவும் செயல்பட்டு வந்தது.
பல வாக்காளர்கள் காலை அங்கு
போலீசாரும் சமூக ஊடகங்களில் இந்த தகவலை பகிர்ந்து, வாக்காளர்களை புதிய இடத்திற்கு வழி நடத்தி உள்ளனர்.