இனி தேங்காய் உடைத்தால் அதன் தண்ணீரை வீசாதீங்க.. உடம்பில் உள்ள இந்த பிரச்சினையை போக்க உதவுமாம்!
Kidney stones
weight loss
Flatulence
Digestive problem
High blood pressure
By Kishanthini
பொதுவாக தேங்காயில் உள்ள அனைத்து பாகங்களும் நமது உடலுக்கு ஏதோ ஒரு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது.
அதிலும் நாம் வேண்டாம் என ஒதுக்கும் தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது.
தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி.
அமினோ அமிலங்கள், என்சைம்கள், பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களைக் கொண்டிருக்கும்.
இதனை அருந்துவது உடலுக்கு நல்ல பயனை வழங்குகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
- செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்
- தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
- தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
- தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
- தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US