ஜேர்மனிக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விடயங்கள்...

Germany
By Balamanuvelan Aug 18, 2022 11:25 AM GMT
Report

ஜேர்மனிக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் முன்கூட்டியே அந்நாட்டைக் குறித்த சில விடயங்களை அறிந்துவைத்துக்கொள்வது நல்லது.

விதிகளைப் பின்பற்றி நடத்தல் மகிழ்ச்சியான சுற்றுலாவுக்கு உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான விதிகள் இருக்கும். குறிப்பாக சுற்றுலா செல்வோர் அந்நாட்டு விதிகளை அறிந்துவைத்திருப்பது, தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவலாம்.

அவ்வகையில், வெளிநாட்டவர்கள் ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றால் என்னென்ன விடயங்களை அறிந்துவைத்திருக்கவேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

பண விடயம்

ஜேர்மனிக்குச் சுற்றுலா வரும் முன், தேவையான அளவுக்கு கையில் பணம் (அல்லது ஏடிஎம் அட்டை) வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் பல இடங்களில் நீங்கள் பணம் கரன்சியாக செலுத்தவேண்டியிருக்கும்.

உள்ளூர் விலைவாசி குறித்து தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்

அதாவது ஜேர்மனியைப் பொருத்தவரை, சில பொருட்களின் விலைகள் மாகாணத்துக்கு மாகாணமும், சொல்லப்போனால் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு விதமாகவும் மாறக்கூடும்.

பயணம்

பயணச் சீட்டு விடயத்தைப் பொருத்தவரை, நகரம், புறநகர்ப்பகுதி, மெட்ரோபோலிட்டன் பகுதி என வெவ்வேறு பகுதிகளுக்கேற்ப வெவ்வேறு விதமாக அமைந்துள்ள பயணச்சீட்டு முறை சுற்றுலாப்பயணிகளை குழப்பக்கூடியதாக அமையலாம். ஆகவே, உள்ளூர் போக்குவரத்து குறித்த வரைபடம் ஒன்றைப் பார்த்து அதற்கேற்ப உங்களுக்கு என்ன டிக்கெட் தேவை என்பதை அறிந்துகொள்ளலாம்.

சில நேரங்களில் சுற்றுலாப்பயணிகளுக்கான சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்படும் அவற்றின் மீது கொஞ்சம் கவனம் வைத்துக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும்.

ரயில் டிக்கெட்களை முன்கூட்டியே வாங்கிவைத்துக்கொள்ளுங்கள்

ஜேர்மனிக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விடயங்கள்... | What Foreigners Need To Know

Photo: picture alliance/dpa | Roberto Pfeil

நீங்கள் உங்கள் ரயில் பயணத்துக்கான டிக்கெட்டை பயணம் செய்யும் தினத்தன்று வாங்குவீர்களானால் அது அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கும். ஆகவே, சில வாரங்களுக்கு முன்பாகவே டிக்கெட் வாங்கிவைத்துக்கொண்டால் டிக்கெட் குறைவான விலைக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஹொட்டலில் சாப்பிடுவது

ஜேர்மானியர்கள் பன்றி இறைச்சியையும் உருளைக்கிழங்கையும் விரும்பி உண்ணக்கூடியவர்கள். ஆகவே, நீங்கள் சைவ உணவு உண்ணுபவராக இருந்தால் துருக்கி மற்றும் வியட்நாம் உணவகங்களுக்குச் செல்லலாம். அங்கே உங்களுக்கு இறைச்சி மற்றும் பால் கலக்காத உணவு வகைகள் கிடைக்கலாம்.

ஷாப்பிங் செல்லுதல்

ஜேர்மனிக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விடயங்கள்... | What Foreigners Need To Know

Photo: picture alliance/dpa | Peter Kneffel

பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகள் கடைகள் இருக்காது. பல சுற்றுலாத்தலங்களும் இயங்காது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. ஆக, ஷாப்பிங் செல்வோர் சனிக்கிழமை ஷாப்பிங்கை முடித்துக்கொள்வது நல்லது.

விதிகள்

நீங்கள் இருக்கும் மாகாணத்தின் கோவிட் விதிகளை அறிந்துவைத்துக்கோள்வது நல்லது. ஏனென்றால், பல ஐரோப்பிய நாடுகள் கோவிட் விதிகளை நீக்கிவிட்டாலும், ஜேர்மன் மாகாணங்கள் சில, இன்னமும் சில விதிகளைக் கடைப்பிடிக்கின்றன. முக்கியமாக மாஸ்கை மறக்காதீர்கள்.

சாலைவிதிகளைக் கடைப்பிடியுங்கள்.

ஜேர்மனிக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விடயங்கள்... | What Foreigners Need To Know

 Photo: picture alliance / Candy Welz / Arifoto Ug/dpa-Zentralbild/dpa | arifoto UG

ஜேர்மனியில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆகவே, சிவப்பு விளக்கு எரியும்போது சாலையைக் கடப்பது போன்ற தவறுகளை செய்யாதீர்கள், அது சட்டப்படி குற்றமும்கூட.

புகைப்பிடிப்பவர்களுக்கு

பெரும்பாலான இடங்களில், குறிப்பாக கட்டிடங்களுக்குள் புகைபிடிக்க அனுமதி கிடையாது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது!  

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US