ஈரான் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் ; புதிய அதி உயர் தலைவரை தேர்வு
ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் அலி லரிஜானி, இன்று ஒரு இடைக்கால தலைமைத்துவ சபை அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மறைந்த அயதுல்லா அலி கமேனியின் வாரிசு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக ஒரு தற்காலிக நடவடிக்கையாக இது அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின் 111 ஆவது பிரிவு, புதிய அதி உயர் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஒரு தற்காலிக சபை பொறுப்புகளை ஏற்க வேண்டுமென அறிவுறுத்துகிறது.

ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அந்தச் சபையில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், உயர் நீதிமன்றத் தலைமை நீதியரசர் கோலம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜேய் மற்றும் பாதுகாவலர் சபையைச் சேர்ந்த மதகுரு ஒருவர் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிபுணர்கள் பேரவையானது புதிய அதி உயர் தலைவர் ஒருவர் உத்தியோகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் வரை இந்தத் தற்காலிக சபை செயல்படும் என குறிப்பிடப்படுகின்றது.
அடுத்த அதி உயர் தலைவராக தற்போது உயிரிழந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் பொறுபேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.