வாட்ஸ்அப்பில் நீங்கள் ஆன்லைனில் இருப்பது ஏனையோருக்கு தெரியக்கூடாதா?
வாட்ஸ்அப்பில் நீங்கள் ஆன்லைனில் இருப்பது எல்லோருக்கும் தெரியக்கூடாது என நினைப்பவரா நீங்கள்? இதே புதிய வசதியொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் புதிய வசதியொன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.தகவல் அனுப்பியவர்கள் தெரிந்து கொள்ளாமலேயே நீங்கள் அந்த தகவல்களை பார்வையிடக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
வாட்ஸ்அப்பின் புதிய வசதி ஊடாக யார் நாம் ஆன்லைனில் இருக்கின்றோம் என்பதனை தெரிந்து கொள்ள முடியும் என்பதனை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் திருத்தி அமைக்கப்பட உள்ளது.
பயனர்களின் அந்தரங்கதன்மையை உறுதி செய்யும் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மீட்டாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
பயனர்களின் அந்தரங்க தன்மையை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.