டொராண்டோவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு நற்செய்தி
டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் (GTA) வீடுகளின் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சில குறிப்பிட்ட பகுதிகளில் 500,000 டாலர்களுக்கும் குறைவான விலையில் வீடுகள் விற்பனையாகியுள்ளதாக 'Wahi' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாத விற்பனை தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிராம்ப்டன் (Queen Street Corridor): இங்கு வீடுகளின் சராசரி விற்பனை விலை 407,000 டொலராகும்.
இதுவே டொராண்டோ பெரும்பாக பகுதியிலேயே மிக மலிவான இடமாக காணப்படுகின்றது.

இங்கு அதிகப்படியான அடுக்குமாடி குடியிருப்புகள் (Condos) இருப்பதே விலை குறைவாக இருக்க முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
பிளெமிங்டன் பார்க் (Flemingdon Park): டொராண்டோ நகரின் எல்லைக்குள் மலிவான இடமாக இது கருதப்படுகிறது. இங்கு சராசரி விலை 452,000 டொலராக உள்ளது.
மிசிசாகா (Core Mississauga): ஸ்குயர் ஒன் (Square One) வணிக வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் சராசரி விலை 475,000 டொலராக பதிவாகியுள்ளது.
வொலஸ் எமர்சன் (Wallace Emerson): டொராண்டோவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இங்கு சராசரி விலை 485,000 டொலராகும்.
மார்க்கம் (Wismer): இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள விஸ்மர் பகுதியில் சராசரி விலை 499,500 டொலராக உள்ளது.
குறைந்த தேவை, மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் கோவிட் காலத்திற்குப் பிறகு வட்டி விகிதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.