வெள்ளை மாளிகையிலிருந்தவர்கள் சில மணிநேரம் வெளியேற்றம்
சந்தேகத்திற்கிடமான வெள்ளை பவுடர் காரணமாக வெள்ளை மாளிகையிலிருந்தவர்கள் சில மணிநேரம் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அது கொக்கெய்ன் என்பது தெரியவந்துள்ளது.
வெள்ளை மாளிகையில் மேற்கொள்ளப்படட வழமையான சோதனை நடவடிக்கையின் போது பாதுகாப்பான கட்டிடமொன்றில் வெள்ளை பவுடர் போன்ற ஒன்று காணப்பட்டதாக அமெரிக்க இரகசிய சேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வோசிங்டன்போஸ்ட் முதலில் இதனை தெரிவித்திருந்தது பின்னர் அதிகாரிகள் இதனை உறுதி செய்தனர்.
அவ்வேளை ஜனாதிபதி குடும்பம் வெள்ளைமாளிகையில் இருக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரகசியசேவை பிரிவினர் வெள்ளை பவுடர் குறித்து எச்சரித்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகை சில மணிநேரம் மூடப்பட்டதாக இரகசியசேவை பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு பிரிவினர் உடனடியாக அழைக்கப்பட்டதோடு அந்த பதார்த்த்தினால் ஆபத்தில்லை என்பதை உறுதிசெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.