சீனாவின் இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
உலகளவில் பைசர்-பயோஎன்டெக், மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த மாதம் சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்த நிலையில், இன்று சீனாவில் 2-வது கொரோனா தடுப்பூசியான சீனோவேக்- கொரோனாவேக் என்ற தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள உலக சுகாதார மையம் அங்கீகரித்துள்ளது.
‘‘உலக சுகாதார அமைப்பு இன்று சீனோவாக்- கொரோனாவாக் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக சரிபார்த்து நாடுகள், கொள்முதல் முகவர் மற்றும் சமூகங்களுக்கு பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் உற்பத்திக்கான சர்வதேச தரங்களை பூர்த்தி செய்கிறது என்ற உறுதிமொழியை வழங்கியது’’ எனத் அறிக்கையில் தெரிவித்துள்ளது.