கனடாவின் அடுத்தபிரதமர் யார்? எழுந்துள்ள விவாதம்!

Prime minister Justin Trudeau Canada
By Sulokshi Jan 09, 2025 03:52 PM GMT
Report

கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ள நிலையில் அவருக்கு பதில் யார் புதிய பிரதமராக வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கனடாவில் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு வீட்டு வசதிக்கான விலை உயர்வு அதிகரித்து வரும் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கனேடிய மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

Canada next Pm

கனேடிய மக்கள் மத்தியில் எதிர்ப்பு

கடந்த வருடம் மார்ச் மாதம் கூட உள்ள நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

தற்போது ஆளும் லிபரல் கட்சிக்கு போதிய பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மைக்கு 170 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில் லிபரல் கட்சி 153 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.

Canada next Pm

சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ட்ரூடோ ஆட்சி செய்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்த அறிவிப்பு அவருக்கும் லிபரல் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ட்ரூடோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இந்தப் பின்னணியில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் புதிய பிரதமர் பொறுப்பேற்கும் வரை பதவியில் தொடரப் போவதாகவும் ட்ரூடோ அறிவித்தார். அதேநேரத்தில் அவரது பதவி விலகலை தொடர்ந்து கனடாவின் புதிய பிரதமராக யார் பொறுப்பேற்றாலும் அவரின் பதவிக் காலம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்கால சவாலை லிபரல் கட்சி எதிர்கொண்டுள்ளது.

mark carney Canada next Pm

மார்க் கார்னி (mark carney)

கனடா வங்கியின் (பேங்க் ஆஃப் கனடா) முன்னாள் தலைவரான மார்க் கார்னி (mark carney) கனடாவின் அடுத்த பிரதமராக ஆகக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியில் இருந்து பல நாடுகளை விட கனடா வேகமாக மீண்டதற்கு மார்க் கார்னி(mark carney) முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

மிகச் சிறந்த பொருளாதார நிபுணரான கார்னி (mark carney)அரசியலில் பிரவேசித்து பிரதமராவதில் நீண்ட காலமாக ஆர்வம் கொண்டிருந்தார் என கூறப்படுகிறது. எனினும் அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பது முக்கிய குறையாக பார்க்கப்படுகிறது.

Chrystia Freeland Canada next Pm

கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட்  (Chrystia Freeland)

அதேபோல் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து கடந்த மாதம் பதவி விலகிய கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland) புதிய பிரதமருக்கான போட்டியில் முன்னிணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் ஃப்ரீலாண்ட் (Chrystia Freeland) ராஜினாமா செய்த பிறகு ட்ரூடோ அவரை கடுமையாக விமர்சித்ததை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Anita Anand Canada next Pm

அனிதா ஆனந்த்  (Anita Anand)

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த் (Anita Anand) அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்போதைய சூழலில் கனடா போக்குவரத்துத் துறை அமைச்சரும் லிபரல் கட்சியின் மூத்த தலைவருமான அனிதா ஆனந்த் (Anita Anand) முன்னணியில் உள்ளார். இவரது தந்தை ஆனந்த் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர். தாய் சரோஜ் ராம் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவர்.

Dominic LeBlanc Canada next Pm

டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc)

மற்றொரு சாத்தியமான வேட்பாளராக புதிய நிதி அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) கருதப்படுகிறது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் ட்ரூடோவின் நெருங்கிய நண்பருமான டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் உடனான இரவு விருந்தில் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இணைந்து பங்கேற்றார்.

ட்ரூடோ குழந்தையாக இருந்தபோது லெப்லாங்க் (Dominic LeBlanc) ட்ரூடோவின் குழந்தை பராமரிப்பாளராக இருந்துள்ளார்.

அதேவேளை ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன் கனடாவின் புதிய பிரதமர் பதவியேற்பு நிகழாது என கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US