கனடாவில் இட்லி, தோசை விலைகளில் ஏற்படப் போகும் மாற்றம்
கனடாவில் இந்திய உணவு வகைகளில் விலை அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தென்இந்திய உணவு வகைகளின் விலை அதிகரிப்பு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள அரிசி ஏற்றுமதி கட்டுப்பாட்டினால் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் வறட்சி உள்ளிட்ட சில காரணிகளினால் விவசாய உற்பத்திகளின் விளைச்சல் குறைவடைந்துள்ளது.
இந்தியாவில் அரிசிக்கான விலை அதிகரிப்பு மற்றும் கட்டுப்பாடு கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
கனடாவின் சில வாடிக்கையாளர்கள், சுப்பர் மார்கெட்களை நோக்கி படையெடுத்து அரிசியை அதிகளவில் கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இட்லி, தோசை போன்ற உணவு வகைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இட்லி, தோவை போன்ற உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கவும், சில உணவுப் பொருட்களின் விற்பனையை இடைநிறுத்தவும் நேரிடும் என கனடாவில் தென்னிந்திய உணவு வகைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கனடா வாழ் இந்தியர்கள் பதற்றமடைந்து அதிகளவு அரிசி வகைகளை வீடுகளில் களஞ்சியப்படுத்த தேவையில் என கோரப்பட்டுள்ளது.