கணவரை என்னிடம் இருந்து பிரித்துவிட்டார்கள்: கதறும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் விதவை
கனடாவில் கொல்லப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரின் விதவை, தமது கணவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவை சேர்ந்த Luis Gabriel என்பவர் கடந்த 2018ல் வில்மோட் டவுன்ஷிப்பில் உள்ள பால் பண்ணை ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
குவாத்தமாலாவில் இவரின் கிராமத்திற்கு அருகே வசித்து வந்த Alex Lopez-Noriega என்பவர் 2017 முதலே அதே பால் பண்ணையில் பணியாற்றி வந்துள்ளார். ஒரே நாட்டவரான இந்த இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் மனக்கசப்பும் இருந்து வந்துள்ளது.
இருப்பினும், 2020 ஜூலை மாதம் சம்பவத்தன்று மாலை நேரம் இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட, இருவரும் கடுமையாக மோதிக்கொண்டுள்ளனர்.
இதில் தலையில் காயம்பட்டு தரையில் சரிந்துள்ளார் Luis Gabriel. இந்த நிலையில் அடுத்த நாள் பகல் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட Lopez-Noriega, படுகொலை வழக்கு பதியப்பட்டு, விசாரணைக்கு பின்னர் 2021 நவம்பர் மாதம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
தற்போது முதன்முறையாக Luis Gabriel தொடர்பில் மனம் திறந்துள்ள அவரது மனைவி, எந்த காரணமும் இல்லாமல் கணவரை தம்மிடம் இருந்து நிரந்தரமாக பிரித்துவிட்டார்கள் என கண்கலங்கியுள்ளார்.
கணவர் இறந்த பின்னர் தாமும் பிள்ளைகளும் கடுமையாக போராடி வருவதாகவும், தங்களின் இந்த நிலைக்கு காரணமான அந்த நபருக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.