சர்க்கஸ் ஆல் கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த மனைவி
சீனாவின் ஷாங்காய் மாகாணம் கணவன் - மனைவி சர்க்கஸ் செய்துகொண்டிருந்தபோது மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஷாங்காய் மாகாணம் சுஹோ நகரை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர்கள் சுஹொங்க் மவ்மவ் மற்றும் சன் மவ்மவ் ( 37). கணவன் மனைவியான இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. சுஹொங்க் மற்றும் சன் ஆகிய இருவரும் இணைந்து சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
அபாயகரமான சர்க்கஸ் நிகழ்ச்சி
அந்தரத்தில் தொங்கியபடி ஒருவரை ஒருவர் பிடித்து மிகவும் அபாயகரமான சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் இருவரும் திறன் வாய்ந்தவர்கள் . இந்நிலையில், அந்நகரின் ஹொவ்ஹா என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமை சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுஹொங்க் மற்றும் சன் சர்க்கஸ் கலைஞர் தம்பதி பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
அந்தரத்தில் தொங்கியபடி சுஹொங்க் மற்றும் அவரது மனைவி சன் ஆகியோர் சர்க்கஸ் செய்துகொண்டிருந்தனர். சுஹொங்க் தனது உடலில் கயிறை கட்டிய படியும் அவரது மனைவி சன் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சர்க்கஸ் செய்துகொண்டிருந்தனர். இதன்போது சுஹொங்க் அந்தரத்தில் தொங்கியபடி தன் மனைவி சன்னை மேலே வீசினார்.
அவர் தனது மனைவியை அந்தரத்தில் காலால் படிக்க வேண்டும். ஆனால், சற்று தடுமாறிய சுஹொங்க் தனது மனைவியின் கையை தன் காலால் பிடிக்க தவறிவிட்டார். இந்நிலையில் சன் பல அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
பல அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சர்க்கஸ் கலைஞர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் உரிய அனுமதி, பாதுகாப்பு இன்றி சர்க்கஸ் நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதித்தது.