காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 9 வயது கனேடிய சிறுமியின் நெகிழ்ச்சி செயல்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீயால் மொத்தமாக பாதிக்கப்பட்ட லிட்டன் கிராம மக்களுக்காக 9 வயது சிறுமி ஒருவர் நெகிழ்ச்சி செயலை முன்னெடுத்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தியால் லிட்டன் கிராமம் மொத்தமாக சேதமடைந்தது.
இதில் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், 9 வயது Emily Loewen என்ற சிறுமி, அவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தமது தோழியான Gracie என்பவருடன் இணைந்து Emily Loewen எலுமிச்சை பானம் விற்கும் கடை ஒன்றை திறந்துள்ளார். Chilliwack பகுதியில் திறக்கப்பட்ட இந்த கடையில் 2 டொலருக்கு எலுமிச்சை பானம் விற்றுள்ளனர் சிறுமிகள் இருவரும்.
கடந்த சில வாரங்களாக மட்டுமே எலுமிச்சை பானம் விற்பனை செய்ததில், 3,400 டொலர்கள் திரட்டியுள்ளனர். மட்டுமின்றி, சிறுமிகளின் இந்த முயற்சிக்கு பத்திரிகை, வானொலி உள்ளிட்டவைகளிலும் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, லிட்டன் நகர மேயர் சிறுமி Emily Loewen-ஐ நேரில் சந்தித்ததுடன், நன்கொடையும் அளித்துள்ளார்.