டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்குமா? பரபரப்பான எதிர்பார்ப்பு
அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான விருதுக்கு 338 பேர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் காசா- இஸ்ரேல் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்பரிந்துரை ஜனவரி 31க்கு பின்னரே அளிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டுக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியற்றவர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆகையால், ட்ரம்ப்க்கான நோபல் வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, இறுதிப் பட்டியலில் அவரது பெயரைச் சேர்க்காததுடன், ஐந்து பேர் கொண்ட நோபல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அவரது பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை, ட்ரம்ப்க்கு நோபல் பரிசு அறிவிக்கப்படாவிட்டால், அது நோர்வேவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.