பிரிட்டன் அரச குடும்பத்தில் அண்ணன் - தம்பி பகை தீர வாய்ப்பில்லை!
பிரித்தானிய இளவரசர் வில்லியம், தனது முடிசூட்டு விழாவில் அவரது தம்பியான ஹரி பங்கேற்பதை விரும்பவில்லை என இளவரசர் வில்லியமிற்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி , 2020ஆம் ஆண்டு, தனது ராஜ குடும்ப பொறுப்புகளை உதறிவிட்டு, அமெரிக்கப் பெண்ணான தன் மனைவி மேகனுடன் அமெரிக்காவில் குடியேறினார் .
ஹாரி பேட்டியால் ஏற்பட்ட விரிசல்
அதன் பின்னர் , தன் மனைவி மேகனுடன் , தன் தந்தை, தன் தந்தையின் மனைவி கமீலா, தன் அண்ணன் இளவரசர் வில்லியம், அண்ணி கேட் என அனைவரையும் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், தனது சுயசரிதைப் புத்தகத்திலும் தனது குடும்பத்தினரை மோசமாக விமர்சித்ததால் ராஜ குடும்பத்துக்கும் ஹரிக்கும் இடையே பெரும் பிரிவு ஏற்பட்டது.
அண்ணனும் தம்பியும் சேர்ந்துவிட மாட்டார்களா என ராஜ குடும்ப நலம் விரும்பிகள் ஏங்கிக்கொண்டிருக்க, , அண்ணன் தம்பிக்கிடையிலான பகை தீர வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இளவரசர் வில்லியம் தான் பிரித்தானியாவின் வருங்கால மன்னர். இப்போதே ஒரு மன்னராக பணியாற்றும் வகையிலான பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டுவருகிறார் வில்லியம்.
மன்னர் சார்லஸ் , புற்றுநோய் உட்பட பல உடல் நல பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள நிலையில், அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இந்நிலையில், இளவரசர் வில்லியம் பிரித்தானியா மன்னராக பொறுப்பேற்கும் நிலையில், அவரது முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி கலந்துகொள்வதை வில்லியம் விரும்பவில்லை என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.