கனடாவில் 14 மில்லியன் டொலர் லொத்தர் பரிசை வென்ற அதிர்ஷ்டசாலி!
கடந்த 21ம் திகதி இரவு நடைபெற்ற 'லோட்டோ 6/49 கோல்ட் போல்' லொத்தர் சீட்டிழுப்பில் 14 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை வென்ற அதிர்ஷ்டச் சீட்டு டொரொன்டோ பெரும்பாக பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெற்றிச் சீட்டு விட்பி நகரில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ லொத்தர் மற்றும் கேமிங் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், "ஒன்ராறியோவின் புதிய மல்டி-மில்லியனரைச் சந்திக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்" என ஓ.எல்.ஜீ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 57,000 டொலர் பெறுமதியான இரண்டாம் பரிசுக்கான வெற்றிச் சீட்டு நயாகரா பிராந்தியத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.