முதல் தடவையாக லொத்தர் சீட்டு வாங்கிய நபருக்கு இன்ப அதிர்ச்சி
கனடாவில் முதன் முதலாக லொத்தர் சீட்டு கொள்வனவு செய்த நபருக்கு பெரும் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் முதன் முறையாக கொள்வனவு செய்த லொத்தர் சீட்டுக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
நதானில் மார்க்ஸ்மான் என்ற நபரே இவ்வாறு பரிசுத் தொகை வென்றுள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
“எனது லொத்தர் சீட்டின் வெற்றி இலக்கங்களை பரீட்சித்த போது இயந்திரக் கோளாறு காரணமாக எண்கள் தவறாக காண்பிப்பதாகவே முதலில் நினைத்தேன். அருகாமையில் இருந்த பணியாளரின் உதவியை நாடினேன். அப்போது அவர் இயந்திரத்தில் கோளாறு கிடையாது நீங்கள் பரிசு வென்றுள்ளீர்கள் என உறுதிப்படுத்தினார், அது எனக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனந்தக் கண்ணீர் மல்க நான் காரில் பயணித்தேன்” என லொத்தர் சீட்டு வெற்றி குறித்து கூறியுள்ளார்.
இதுவே தாம் முதல் தடவையாக லொத்தர் சீட்டு ஒன்றை கொள்வனவு செய்த சந்தர்ப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாயாரின் அடகுக் கடனை செலுத்தவும் சகோதரர் உள்ளிட்ட உறவினர்களது எதிர்காலத்திற்கும் இந்த பணத்தை பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.