கனடாவில் காணாமல் போன புகைப்படம் 2 ஆண்டுகளின் பின்னர் இத்தாலியில் மீட்பு
உலகின் பிரபல்யமான புகைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் ரோரிங் லயன் என்ற புகைப்படம் கனடாவில் காணாமல் போய் இரண்டு ஆண்டுகளின் பின்னர் இத்தாலியில் மீட்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் புகைப்படமே இது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த புகைப்படம் அரிய புகைப்படம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் இத்தாலியன் ரோம் நகருக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபல கனடிய புகைப்படக் கலைஞர் யூசுப் கார்ஸ் என்பவரினால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2021 டிசம்பர் மாதம் 2022 ஜனவரி மாதத்திற்கு இடையில் இந்த புகைப்படம் காணாமல் போயுள்ளது.
ஹோட்டல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த படமே இவ்வாறு காணாமல் போயிருந்தது. குறித்த சந்தேக நபர் அசல் படத்தை களவாடி, நகல் ஒன்றை பதிலீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படம் காணாமல் போன விவகாரம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெரிய வந்தது.
இந்த புகைப்படத்தை ஒன்றாரியோவைச் சேர்ந்த 43 வயதான பவுசான் என்பவர் களவாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகம் அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.