அமெரிக்காவில் குளிர்கால புயல்; 4000 விமானங்கள் இரத்து
அமெரிக்காவை பாதித்துள்ள குளிர்கால புயல் காரணமாக சுமார் 4000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புயல் நிலைமையானது நாளை வரை நீடிக்கும் எனவும், சில மாநிலங்களில் வெப்பநிலையானது -45 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் தேசிய வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி ஓக்லஹோமா (Oklahoma), கன்சாஸ் (Kansas), கென்டக்கி ( Kentucky), வர்ஜீனியா (Virginia)மற்றும் மேற்கு வர்ஜீனியா (West Virginia) மற்றும் கிழக்கு கடற்கரை நகரங்கள் உட்பட பல மாநிலங்களில் ஒரு அடி வரை பனிப்பொழிவு சாத்தியமாகும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு காரணமாக பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.