கனடாவில் வாகனமொன்றில் 16 இலட்சம் சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு
கனடாவின் கேப் பிரெட்டன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சாதாரண சோதனையானது, ஒரு மில்லியன் அல்லது 10 இலட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்படுவதில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெம்பர்டோ (Membertou) அருகிலுள்ள நெடுஞ்சாலை 125-இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், மெர்சிடிஸ் வான் (Mercedes van) ஒன்றின் சாரதி இருக்கையில் ஒருவர் சரிந்து கிடப்பதை ரோந்து பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி கவனித்துள்ளார்.
அவரது உடல்நிலை அல்லது பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்ட அதிகாரி, ஒரு நலன்புரி சோதனையை மேற்கொண்டார்.

அதிகாரி அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் மது அல்லது போதைப் பொருள் அருந்தவில்லை என்பது உறுதியானது.
ஆனால், அந்த வானின் உட்புறத்தில் சட்டவிரோத கடத்தல் பொருட்கள் வெளிப்படையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அதிகாரி அவதானித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தைச் சோதனையிட்டதில், சுமார் 160 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 1.6 மில்லியன் (16 இலட்சம்) சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அந்த வானைச் செலுத்திய ஒண்டாரியோவின் பீட்டர்பரோவைச் (Peterborough) சேர்ந்த 51 வயதுப் பெண் கைது செய்யப்பட்டார்.