முதல்வர் டக் போர்ட்டின் பிரச்சாரத்திற்குள் புகுந்த மர்ம பெண் கைது
ஒன்றாரியோ முதல்வர் டக் போர்டின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது பெண் ஒருவர் அத்து மீறி பிரவேசித்தமை பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஹமில்டன் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரச்சாரத்தில் அத்து மீறி பிரவேசித்த குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும், மாகாண முதல்வருமான போர்ட்டுக்கு எதிர்ப்பை வெளியிட்ட குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 33 வயதான கார்மியா சாட் என்ற பெண் சட்டத்தரணி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முதல்வர் போர்ட்டிற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை எனவும் தாம் வேறும் ஒர் கட்சியின் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் குறித்த பெண் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.