பொலிஸ் அதிகாரியின் மரணம்: 83 வயது பெண்மணி மீது வழக்கு
யார்க் பிராந்திய காவல்துறை அதிகாரி மரணம் தொடர்பாக 83 வயது பெண்மணி மீது ஒன்ராறியோ மாகாண காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஜூலை 23ம் திகதி மீஃபோர்டில் பிரதான சாலை 6-10 இல் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து தொடர்பில் கிரே புரூஸ் ஒன்ராறியோ மாகாண காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் 55 வயதான பொலிஸ் அதிகாரி Craig Heatley என்பதும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் காயம் காரணமாக அவர் மரணமடைந்துள்ளார்.
இவரது மனைவியும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில், ஆகஸ்டு 6ம் திகதி Nina Nodwell என்ற 83 வயது பெண்மணி மீது இரு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.