ஹமில்டன் துப்பாக்கி சூட்டில் பெண் பலி
கனடாவின் ஹமில்டன் பகுதியில், வியாழக்கிழமை இரவில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பர் ஜேம்ஸ் வீதி Upper James Street மற்றும் மொஹாவொக் வீதி Mohawk Road சந்திப்பில், நேற்று இரவு இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் X தளத்திலர் வழியாக வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு, காயமடைந்த பெண் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்ததாக மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.
தற்போது சந்தேகநபர் அல்லது சம்பவத்தில் பயன்படுத்திய வாகனம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து, சம்பவம் இடம்பெற்ற பகுதியின் வீதிகளை மூடி வைத்து பொலிஸார், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம், குறித்த மேலதிக தகவல்களை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.