நடுவானில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்: அவசரமாக தரையிறங்கிய விமானம்
நடுவானில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவசர அவசரமாக விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் இருந்து கொச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் மருத்துவக் குமுவினர் பயணித்த நிலையில் பிரசவ வலியால் துடித்துவந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதன்போது விமான ஊழியர்களும் உதவி செய்துள்ளனர்.
சிறுது நேரத்தில் குறித்த கர்ப்பெணி பெண்க்கு அழகான ஆண் குழ்ந்தை ஒன்று பிறந்தது. தாய்க்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதால் விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவரச அவசரமாக தரையிறங்கியது.
குறித்த விமானத்தில் இருந்த மருத்துவ குழு தாயையும், குழந்தையையும் பத்திரமாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.