19வது மாடியில் தலைகீழாக தொங்கிய பெண்: அடுத்த நொடியில் நடந்த திக்திக் காட்சிகள்
சீனாவில் துணி காய வைக்க முயன்ற 82 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், 19வது மாடியின் அந்தரத்தில் தொங்கிய திக்திக் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளது.
கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்ததாக சீன நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, தன்னுடைய வீட்டின் பால்கனியில் இருந்து துணியை காயவைக்க முயன்ற போது, தவறி விழுந்ததில் கம்பியின் நடுவே சிக்கிக் கொண்டுள்ளார்.
19 வது மாடியிலிருந்து தலைகீழாக தொங்கிய அவரை, விரைந்து வந்த மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளது.
An 82-year-old woman was seen dangling upside down from a clothes rack after falling from the 19th floor of a building in eastern China’s Jiangsu province. pic.twitter.com/Y4yvFRNBo8
— South China Morning Post (@SCMPNews) November 23, 2021