திருமண ஆடையை அணிந்து மாரத்தான் ஓடிய பெண்; காரணத்தால் நெகிழ்ச்சி
உயிரிழந்த கணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண், திருமண ஆடையை அணிந்து மாரத்தான் ஓடிய சம்பவம் ஒன்று நெகிழவைத்துள்ளது.
லண்டனை சேர்ந்த லாரா கோல்மன்-டே என்னும் தனது மறைந்த கணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 12 மாதங்களில் 13 மாரத்தான் ஓட்டங்களை நடத்தும் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மறைந்த கணவருக்கு அஞ்சலி
இரத்த புற்றுநோய் ஆராய்ச்சி தொண்டு நிறுவனத்திற்கான நிதி திரட்டலின் ஒரு பகுதியாக, அவரது திருமண நாளில், மாரத்தானின் கடைசி மூன்று மைல்களை திருமண ஆடையை அணிந்து கொண்டு ஓட லாரா கோல்மன் முடிவு செய்தார்.
23 மைல்கள் ஓடிய லாரா, இன்னும் மூன்று மைல்கள் மீதமுள்ள நிலையில், தனது திருமண ஆடையை மாற்றி மாரத்தான் ஓடி போட்டியை முடித்தார்.
இந்த நிலையில் திருமண ஆடையை அணிந்து கொண்டு ஓடுவது மிகவும் கடினமாக இருந்தபோதிலும், அதை தனது கணவருக்காக அணிந்து கொண்டு ஓடியதாக லாரா கூறுகிறார்.
கடுமையான வெப்பம் மற்றும் கனமான ஆடை ஆகியவற்றின் காரணமாக மாரத்தான் ஓடுவது கடினமாக இருந்தாலும், பந்தயத்தை முடித்ததில் தான் பெருமைப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
லாராவின் கணவர் சாண்டர், இரத்தத்தையும், எலும்பு மஜ்ஜையையும் பாதிக்கும் அரிய வகை லுகேமியாவால் அவதிப்பட்டு வந்தார். ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல்நிலை இன்னும் மோசமடைந்து கடந்த வருடம் இறந்துவிட்டார்.
அதன் பின்னர் லாரா தனது கணவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், இரத்த புற்றுநோய் ஆராய்ச்சி தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதற்காகவும் மாரத்தானில் பங்கேற்றார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 51 வயதான லாரா 12 மாதங்களில் 13 மாரத்தான்களில் பங்கேற்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்