சீனாவை திகைக்க வைத்த பெண் ; ஜெயிலுக்கு போவதை தவிர்க்க இப்படி ஒரு காரியம்
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் 2020-ல் மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண், கர்ப்பமாக இருந்ததால் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, கர்ப்பிணிகளுக்கோ அல்லது பாலூட்டும் தாய்மார்களுக்கோ வீட்டுக் காவல் வழங்கப்படலாம் என்ற விதியைப் பயன்படுத்தி, இவர் தனது மகப்பேறு காலம் முடியும்போது மீண்டும் மீண்டும் கர்ப்பமாகி, கடந்த 4 ஆண்டுகளில் மூன்று முறை சிறைக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளார்.
இவர் பெற்ற மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், ஒரு குழந்தையை தனது சகோதரரிடமும் ஒப்படைத்துள்ளார்.
பொலிஸ் விசாரணையில் இவரது தொடர் கர்ப்பத் திட்டம் தெரியவந்தது, இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட்டுள்ளார்.