கொதிக்கும் சூப்பை மேனேஜர் முகத்தில் ஊற்றிய பெண்! வைரலாகும் வீடியோ
ஹோட்டலில் இளம்பெண் ஒருவர் சூடான சூப்பை மேனேஜர் முகத்தில் கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மெக்சிகன் உணவகம் ஒன்றில் ஒரு பெண் சூப் ஒன்றை ஆடர் செய்துள்ளார். இதையடுத்து அவர் ஆர்டர் செய்த சூப் அவரது இடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதில் பிளாஸ்டிக் போன்ற பொருள் ஒன்று இருப்பதாக உணவகத்தின் மேனேஜரிடம் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த உணவகத்தின் மனேஜர் சூப்புக்கான செலவை முழுவதையும் திருப்பி தருவதாக கூறினார். ஆனால் அந்த பெண் அதற்குள் கொதிக்கும் சூப்பை அப்படியே மனேஜர் முகத்தில் வீசி விட்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறி உள்ளார்.
இதனால் மனேஜர் முகத்தில் காயங்களடன் கண் எரிச்சல் போன்ற உபாதைக்கு ஆளாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கைப்பற்றிய பொலிசார் குறிப்பிட்ட பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.