கனடாவில் குடியுரிமை பெற்றுத் தருவதாக ஏமாற்றிய பெண் ; தேடும் பொலிஸார்
கனடாவில் குடியேறிகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
டொரண்டோ நகரின் மிட்டவுன் பகுதியில் குடிவரவு சேவைகள் வழங்குவதாகக் கூறி பலரிடமிருந்து பணம் பெற்றுவிட்டு போலி ஆவணங்களை வழங்கியதாக 43 வயதுடைய மரியா கொர்பஸ்க்கு (Maria Corpuz) மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2023 மே 31 முதல் 2025 மே 31 வரை இரண்டு வருட காலத்தில், கனடிய குடியுரிமை மற்றும் வேலை அனுமதிக்கான ஆவணங்களைத் தயார் செய்வதாகக் கூறி பல நபர்களிடம் கொர்பஸ் பணம் பெற்றுள்ளார்.
பின்னர் அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதை பாதிக்கப்பட்டவர்கள் அறிந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மரியா கொர்பஸ்க்கு கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் விதைக்கப்பட்டுள்ளன: மரியா கொர்பஸ், 5 அடி 4 அங்குலம் உயரம், நடுத்தர உடலமைப்பு, கருப்பு தோள்வரை வளரும் முடி மற்றும் பழுப்பு கண்களைக் கொண்டவர் என விவரிக்கப்பட்டுள்ளது.
மரியா கொர்பஸை மேலும் பலர் ஏமாந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவரை சட்டத்தரணியின் உதவியுடன் போலீசில் சரணடைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் தகவல் தெரிந்தவர்கள் டொரண்டோ பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.