பிரான்ஸ் நீதிமன்றத்தில் போதைப்பொருள் திருடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி
நீதிமன்றத்தில் கொக்கைன் போதைப்பொருள் திருடிய பெண் ஒருவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Vannes நகர குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் 33 வயதுடைய பெண் ஒருவர் குற்றவாளிகளிடம் இருந்து கைப்படறப்பட்ட கொக்கைன் போதைப்பொருளை திருடியுள்ளார். இதனை சக ஊழியர்கள் கண்டதால் அந்த பெண் சிக்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் சொந்த பாவனைக்காக திருடியாதவனும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்தோடு திருடுவதை அவரே புகைப்படம் எடுத்து தனது நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.
அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனையும், 500 யூரோக்கள் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது. அத்தோடு அடுத்த ஐந்து வருடங்களுக்கு கடமையாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.