ரஷ்யாவையும் வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்
ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார்.
புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே மிஷுஷ்டின் இதனை தெரிவித்தார்.
அண்டை நாடுகள் என்ற முறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்யாவும் வடகொரியாவும் விரும்புகின்றன எனவும் இதற்கான சின்னமாகவே புதிய பாலம் திகழும்,” எனவும் மிஷுஷ்டின் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.