உலகக் கிண்ணப் போட்டி ; பரிசுவழங்கவுள்ள ட்ரம்ப்
பிபா உலகக் கிண்ணக் கால்பந்து விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ ஆகியோர் இணைந்து உலகக் கிண்ணத்தையும் பரிசுகளையும் வழங்கவுள்ளனர்.
நியூயோர்க் நகரில் புகழ்பெற்ற மெட்லைப் மைதானத்தில் இன்று (19) நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக நேருக்கு நேர் மோதுகின்றன.
இன்றைய இறுதிப் போட்டியைக் காண்பதற்காக சுமார் 80,000 பார்வையாளர்கள் மைதானத்தில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த உலகக்கிண்ணத் தொடரின் 7 முக்கிய ஆட்டங்கள் ஏற்கனவே இந்த மைதானத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில் இரசிகர்களை உற்சாகப்படுத்த பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்ட்பிளேஸ் கிறிஸ் மார்ட்டின், மெடோனா, ஷகிரா, பி.டி.எஸ் ஜஸ்டின் பைபர் மற்றும் குஸ்டவோ டுடாமெல் ஆகியோரின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன.
மெட்லைப் மைதானத்தின் புல்தரை பரப்பு மிகவும் கடினமாக இருப்பதாக பெரும்பாலான வீரர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இது ஆட்டத்தின் வேகத்திற்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது.
உலகக்கிண்ணத்தை முத்தமிடப் போவது மெஸ்ஸியின் அர்ஜென்டினாவா? அல்லது ரோட்ரியின் ஸ்பெயினா? என்ற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள கால்பந்து இரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.